என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவால் திருப்பூரில் பனியன் வர்த்தகம் கடும் பாதிப்பு
Byமாலை மலர்7 Aug 2021 12:42 PM IST (Updated: 7 Aug 2021 12:42 PM IST)
காதர்பேட்டை சந்தைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக பின்ன லாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. இவை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி சார்ந்து செயல்படுகின்றன.
இவற்றின் உற்பத்தி சார்ந்து பனியன் மொத்த மற்றும் சில்லரை விற்பனைக்கென திருப்பூர் காதர்பேட்டையில் கடைகள் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை நிறுவனங்கள் உள்ளன. முதல் தரம், 2-ம் தரம் என தரங்களின் அடிப்படையில் குறைந்த விலையில் இங்கு பனியன் உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
காதர்பேட்டை சந்தைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாக பின்ன லாடைகளை வாங்கி ஏற்றுமதி செய்வதும், வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதும் நடைபெற்று வருகிறது. இதனால் காதர் பேட்டையில் எப்போதும் ஆடை விற்பனை மும்முரமாக நடைபெறும். காதர்பேட்டைக்கு வரும் வெளிமாநில வியாபாரிகளில் முக்கிய பங்கு வகிப்பது கேரள வியாபாரிகள்.
கேரளாவில் இருந்து தினமும் ரெயில்கள் மூலம் வியாபாரிகள் காதர்பேட்டைக்கு வந்து ஆடைகளை வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தமிழகத்திலும் கேரளாவிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளதால் காதர்பேட்டைக்கு கொள்முதல் செய்யவரும் கேரள வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதுகுறித்து காதர்பேட்டை பின்னலாடை வியாபாரிகள் கூறும்போது:
நாள்தோறும் கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் துணி மற்றும் பின்னலாடைகளை கொள்முதல் செய்ய வருவார்கள். ஆனால் தற்போது அவர்களது வருகை முற்றிலுமாக இல்லை.
2 மாநிலங்களுக்கும் இடையில் கொரோனா தொற்று பரவலால் நிலவும் கட்டுப்பாடுகளே இதற்கு காரணம். வியாபாரிகள் வருகை குறைந்துள்ளதால் எங்களுக்கான வழக்கமான வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதவிர டெல்லி, மேற்கு வங்கம்,மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் கடந்த ஒரு மாதமாக குறைந்து காணப்படுகிறது. சூடான், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பின்னலாடைகளின் அளவு சராசரியாக உள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X