search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உலக வெப்பமயம் அதிகரிக்க காரணமாக இருக்கும் டாப்-10 பெருநகரங்கள் பட்டியல் வெளியீடு

    13, 115 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் உலக வெப்பமயம் அதிகரிக்க காரணமாக இருக்கும் முதல் பத்து மோசமான இடங்களில் சென்னை உள்பட நான்கு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உலகளாவிய வெப்பநிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தினர். அதில் உலகளவில் தீவிர வெப்பம் அதிகரித்து வருவதாகவும் முதல் பத்து மோசமான இடங்களில் சென்னை உள்பட நான்கு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரியவந்துள்ளது.

    இந்த ஆய்வுக்காக உலகளவில் 13,115 நகரங்களை தேர்வு செய்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதில் தீவிர வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை மூன்று மடங்கு உயர்ந்து நகர்புற வெப்பநிலையை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக தென் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் நகர்புற மக்கள் வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் வெப்பநிலை ஆகிய காரணங்களால் உலகளவில்வெப்பமயம் தீவிரமடைந்துள்ளது.

    13, 115 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் உலக வெப்பமயம் அதிகரிக்க காரணமாக இருக்கும் மோசமான நகரங்களின் பட்டியலையும் ஆய்வாளர்கள் வெளியிட்டனர். இதில் முதல் 10 இடங்களில் 4 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. புதுடெல்லி இரண்டாவது இடத்திலும் கொல்கத்தா 3-வது இடத்திலும் மும்பை 5-வது இடத்திலும் சென்னை 7-வது இடத்திலும் உள்ளன.

    இதன் மூலம் இந்தியா மட்டும் உலகளவில் 52 சதவீதம் வெப்பத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

    கோப்புபடம்

    இதைத்தவிர டாக்கா, முதல் இடத்திலும், பாங்காக், கராச்சி, துபாய், மனிலா ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களிலும் உள்ளன.

    நகர்புறங்களில் மக்கள் தொகை அதிகரிப்பே உலக வெப்பமயம் உயருவதற்கு 4-ல் 3 பங்கு காரணமாக உள்ளன.

    இதையும் படியுங்கள்...லக்கிம்பூர் வன்முறை சம்பவம்: விசாரணைக்கு ஆஜராகாத மத்திய மந்திரியின் மகன்

    Next Story
    ×