என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை செயலகத்தில் மரம் சாய்ந்து விழுந்து பெண் போலீஸ் பலி- ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு
Byமாலை மலர்2 Nov 2021 1:02 PM IST (Updated: 2 Nov 2021 2:36 PM IST)
தலைமை செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னையில் நேற்று இரவு பெய்த மழை காலை வரை நீடித்தது. இன்று காலை 8 மணியளவில் பலத்த மழை கொட்டியது.
சென்னை தலைமைச்செயலகம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த நேரத்தில் காலை 9.10 மணியளவில் கவிதா என்ற பெண் போலீஸ் தலைமைச் செயலக காவல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் தலைமைச் செயலகத்துக்குள் சென்றார்.
அப்போது மழை பெய்து கொண்டே இருந்ததால் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பினார்.
அப்போது மழையுடன் வீசிய பலத்த காற்றில் தனிப்பிரிவு அலுவலகம் அருகே நின்ற பெரிய புங்கை மரம் திடீரென வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் கவிதா மீது விழுந்தது. இதில் அவர் மரத்துக்கு அடியில் சிக்கினார்.
கவிதாவின் தலை மரத்தின் அடியில் சிக்கியதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
தலையில் சிறிய ஹெல்மெட் மற்றும் மழை கோட் அணிந்து கொண்டு கவிதா பணிக்கு வந்திருந்தார். மரம் விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியதில் அவர் அணிந்திருந்த சிகப்பு நிற ஹெல்மெட் தனியாக கழன்று விழுந்து கிடந்தது.
உடனடியாக பெண் போலீஸ் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் மரக்கிளைகளை அகற்றி நீண்ட போராட்டத்துக்கு பின்னரே அவரது உடலை மீட்டனர்.
மரம் சாய்ந்து விழுந்தபோது தலைமைச்செயலக வளாகத்துக்குள் ஒரு சில காவலர்களும் பணியில் இருந்தனர். மரம் விழுந்த இடத்தில் போக்குவரத்து காவலர் முருகன் என்பவரும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அவரும் மரம் விழுந்ததில் சிக்கிக்கொண்டார். இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
மரத்தை அகற்றும் பணியின் போது பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், ராஜா, கோபு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மரம் சாய்ந்து உயிரிழந்த பெண் போலீஸ் கவிதா திருமணமாகி தண்டையார்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கணவர் பெயர் சாய்பாபா. ரெயில்வே ஊழியர். மகன் அருண்குமார். 22 வயதாகும் இவர் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மகள் பெயர் சினேகபிரியா 20 வயதான இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறார்.
முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த அவருக்கு இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் காவல் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
பெண் போலீஸ் பலியானது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று (2-ந்தேதி) காலை சுமார் 9 மணியளவில் தலைமைச் செயலக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.
அப்போது அங்கே காவல் பணியில் இருந்த முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய தலைமை காவலர் கவிதா மரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.
பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
பலியான கவிதா இன்று காலை வீட்டில் இருந்தவர்களிடம் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக சந்தோஷத்துடன் கூறிவிட்டு வந்தார். எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மீட்கப்பட்ட கவிதாவின் உடல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.
தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைச் செயலக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இன்று காலை 9.10 மணியளவில் மரம் சாய்ந்ததால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை.
காலை 10 மணிக்கு பிறகு முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக பொது மக்கள் அங்கு அதிகளவில் திரண்டிருப்பார்கள். அது போன்ற நேரத்தில் இந்த மரம் விழுந்திருந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் உள்ள பழமையான மற்ற மரங்களை பாதுகாக்கும் வகையில் அதன் அடிப்பகுதியை போதுமான அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போது வேரோடு சாய்ந்து விழுந்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
பெண் போலீஸ் உயிரிழந்தது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மரம் சாய்ந்து விழுந்த இடத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதற்காகவே காலையில் வீட்டுபணிகளை எல்லாம் முடித்துவிட்டு தலைமைச் செயலகத்துக்கு வேலைக்கு வந்தார். அப்போதுதான் பழமையான மரம் பெண் போலீஸ் கவிதாவின் உயிரை பறித்துவிட்டது.
பெண் போலீஸ் பலியானது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இன்று (2-ந்தேதி) காலை சுமார் 9 மணியளவில் தலைமைச் செயலக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.
பணியில் இருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த கவிதா குடும்பத்தாருக்கு உடனடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
பலியான கவிதா இன்று காலை வீட்டில் இருந்தவர்களிடம் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக சந்தோஷத்துடன் கூறிவிட்டு வந்தார். எதிர்பாராதவிதமாக மரம் சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மீட்கப்பட்ட கவிதாவின் உடல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.
தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் உயிரிழந்த சம்பவம் சென்னையில் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைச் செயலக ஊழியர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இன்று காலை 9.10 மணியளவில் மரம் சாய்ந்ததால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை.
காலை 10 மணிக்கு பிறகு முதல்- அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிப்பதற்காக பொது மக்கள் அங்கு அதிகளவில் திரண்டிருப்பார்கள். அது போன்ற நேரத்தில் இந்த மரம் விழுந்திருந்தால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தலைமைச் செயலகத்தில் உள்ள பழமையான மற்ற மரங்களை பாதுகாக்கும் வகையில் அதன் அடிப்பகுதியை போதுமான அளவுக்கு பலப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. தற்போது வேரோடு சாய்ந்து விழுந்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
பெண் போலீஸ் உயிரிழந்தது தொடர்பாக கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மரம் சாய்ந்து விழுந்த இடத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆகியோர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மரம் விழுந்தது தொடர்பாக அங்கிருந்த காவலர்களிடமும், அதிகாரிகளிடமும் அவர்கள் விவரங்களை கேட்டறிந்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் இது போன்று மேலும் ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இருவரும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்... திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 4-ம்தேதி தொடங்குகிறது
Next Story
×