என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடிய விடிய கனமழை- விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் இன்று 3வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை
Byமாலை மலர்3 Nov 2021 10:31 AM IST (Updated: 3 Nov 2021 10:31 AM IST)
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் நிரம்பி உள்ளது. தொடர்ந்து ஏரி-குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனிடையே 4 நாட்களுக்கு கடலோர மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் இந்த மழை வெளுத்து கட்டியது.
பலத்த மழை கொட்டியதால் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று 3-வது நாளாக விடுமுறை அளிப்பதாக மாவட்ட கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று 3-வது நாளாக விடுமுறை அறிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பிறப்பித்துள்ளார்.

Next Story
×