search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழை
    X
    கனமழை

    தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு

    தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

    விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்யும்.

    நாளை (4-ந்தேதி) டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, கோவை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    5-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

    வானிலை ஆய்வு மையம்

    6-ந்தேதி நீலகிரி, கோவை, சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும்.

    7-ந்தேதி தென் மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...தமிழகம் முழுவதும் பலத்த மழை- பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின

    Next Story
    ×