என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்தாமரைகுளத்தில் மின்சாரம் தாக்கி பால் வியாபாரி-தொழிலாளி மரணம்
Byமாலை மலர்3 Nov 2021 2:28 PM IST (Updated: 3 Nov 2021 2:28 PM IST)
தென்தாமரைக்குளத்தில் இன்று மின்சாரம் தாக்கி பால் வியாபாரி மற்றும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்தாமரைக்குளம்:
தென்தாமரைக்குளம் பள்ளிக்கூடம் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் மாணிக்கராஜ்(வயது66). அவரது மனைவி சொர்ண சாந்தி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனால் ஆல்பர்ட் மாணிக்கராஜ் தனது மனைவியுடன் வசித்து வந்தார். ஆல்பர்ட் மாணிக்கராஜ் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். மாடுகளை கட்டிவைக்க தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்திருந்தார். அதில் மாடுகளை கட்டிவைத்து பராமரித்து வந்தார்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக ஆல்பர்ட் மாணிக்கராஜ் வீட்டின் மாட்டு கொட்டகை சேதமடைந்திருக்கிறது. இதனால் அவரது வீட்டிற்கும், மாட்டு கொட்டகைக்கும் இடையே மழைநீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் வீட்டினுள் தண்ணீர் வந்த படி இருந்திருக்கிறது.
ஆகவே மாட்டுக்கொட்டகையை சரிசெய்ய ஆல்பர்ட் மாணிக்கராஜ் திட்டமிட்டார். இதற்காக தென்தாமரைக்குளம் பால்பண்ணை தெருவை சேர்ந்த பகவதியப்பன்(66) என்ற தொழிலாளி இன்று வந்தார். அவர் ஆல்பர்ட் மாணிக்கராஜ் வீட்டு மாட்டு கொட்டகையின் மேல் பகுதிக்கு செல்ல இரும்பு ஏணியை பயன்படுத்தி ஏறியுள்ளார்.
அப்போது மின்கம்பத்தில் இருந்து வரக்கூடிய சர்வீஸ் வயர் கொட்டகையை தொட்டபடி இருந்துள்ளது. அதில் இருந்து மின்சாரம் கொட்டகையில் பாய்ந்துள்ளது. இதனை அறியாத பகவதியப்பன், இரும்பு ஏணியை கொட்டகை மீது சரித்துவைத்து ஏறினார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதனால் அவர் அலறி துடித்தார். அதனை பார்த்த ஆல்பர்ட் மாணிக்கராஜ் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பகவதியப்பன், ஆல்பர்ட் மாணிக்கராஜ் ஆகிய இருவரும் துடிதுடித்து இறந்தனர்.
மின்சாரம் தாக்கி விழுந்த போது ஆல்பர்ட் மாணிக்கராஜ் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியின் மீது விழுந்து விட்டார். இதனால் அந்த கன்றுக்குட்டியும் மின்சாரம் பாய்ந்து பலியாகியது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவஇடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
மாட்டுக்கொட்டகையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மற்றும் பால் வியாபாரி மின்சாரம் தாக்கி பலியான தகவல் அந்த பகுதியில் பரவியது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும், கிராம மக்களும் அங்கு திரண்டனர்.
பலியாகி கிடந்த இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதனர். தொழிலாளி பகவதியப்பனின் உடலை அவரது குடும்பத்தினர் கட்டியணைத்து அழுதது அந்த பகுதியில் திரண்டு நின்ற அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்த பரிதாப சம்பவம் குறித்து தென்தாமரைக்குளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைக்குளம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் பகவதியப்பன் மற்றும் ஆல்பர்ட் மாணிக்கராஜ் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பால் வியாபாரி மற்றும் தொழிலாளி பலியான சம்பவம் தென்தாமரைக்குளம் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×