search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மழைநீர் தேங்கிய பகுதிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    மழைநீர் தேங்கிய பகுதிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    திருப்பூரில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆய்வு

    தேங்கிய மழைநீரை மாநகராட்சி லாரி மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் மழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. திருப்பூர் கே.பி.என்.காலனி 3-வது வீதியில் கழிவுநீர் கால்வாய் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதனால் அந்த வீதியில் மழைநீர் செல்ல வழியில்லாமல் அதிகப்படியான மழைநீர் தேங்கியது.

    அந்த வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்ததும் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். தேங்கிய மழைநீரை மாநகராட்சி லாரி மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பின்னர் அந்த பகுதிகளை அவர் பார்வையிட்டார். அதன்பிறகு பாண்டியன் நகர் பகுதிகளில் மழைநீரால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார்.
    Next Story
    ×