என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளக்காடானது சென்னை- நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை
Byமாலை மலர்7 Nov 2021 10:04 PM IST (Updated: 7 Nov 2021 10:04 PM IST)
சென்னையில் நாளை அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. நாளையும் நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் தவிர்த்து அனைத்து அரசு அலுவலகங்களும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மழை நிலவரங்களை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவின், பொது போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
×