என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி
Byமாலை மலர்21 Feb 2022 10:51 AM IST (Updated: 21 Feb 2022 12:17 PM IST)
நேரடி படிப்புக்கு இணையானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியக் குழு 900 கல்லூரிகளுக்கு ஆன்லைன் பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை:
சில பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வராமல் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை முடிக்க முடியும்.
இதன்மூலம் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை பெற முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. மேலும், நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்லைன் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் கருதப்படுவார்கள்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035-ம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறை நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. அந்தவகையில் ஆன்லைன் வழி இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் முதுகலை படிப்புகளில் சேர இளங்கலை படிப்புகளில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளை துவங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் NAAC எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பல்கலைக்கழகங்களில் மட்டும் ஆன்லைன் வழி பட்டப்படிப்புகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வராமல் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை முடிக்க முடியும்.
இதன்மூலம் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை பெற முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. மேலும், நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்லைன் வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களும் கருதப்படுவார்கள்.
ஆன்லைன் வழி பட்டப்படிப்புகளை துவங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. எனினும் ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் NAAC எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் கல்லூரிகள் சேர்வதற்கான குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும். மத்திய தேர்தல் முகமை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... நவீன கால அவுரங்கசீப் அகிலேஷ் யாதவ் - சிவராஜ் சிங் சவுகான் தாக்கு
Next Story
×