என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா
Byமாலை மலர்21 March 2022 3:44 PM IST (Updated: 21 March 2022 3:44 PM IST)
குற்ற சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்க சென்னை நகரம் முழுவதும் சுமார் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
சென்னை:
சென்னையின் முக்கிய பகுதிகளில் சாதாரண கண்காணிப்பு கேமராவை விட அதிக திறன் கொண்ட எ.என்.பி.ஆர். கேமரா, முக அடையாளம் காணும் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கட்ட மாக செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மொத்தம் 7,500 இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
சென்னை காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதி ரூ.150 கோடி இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் வழக்கமான கண்காணிப்பு கேமராவை விட பல்வேறு புதிய திறன்களும், காட்சிகளின் அப்படையில் எச்சரிக்கை விடுக்கும் வசதியும் கொண்டவை. இதை பொருத்தினால் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும்.
இந்த கேமராக்கள் வெறும் காட்சிகளை மட்டுமல்லாமல் ஒருவரது உணர்வுகளையும் அறியக்கூடிய திறன் பெற்றது. ஓரிடத்தில் குற்ற சம்பவம் நிகழ்வதற்குரிய சூழல் ஏற்பட்டால் அதை முன் கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் திறன் கொண்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தொந்தரவு சம்பவங்கள் நடைபெறும் இடங்கள், பெண்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோவில்கள், கடற்கரைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இதை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுப்பாட்டு அறை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.60 கோடியில் விரைவில் கட்டப்பட உள்ளது.
இந்த கேமராக்களை கையாள்வது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story
×