search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அதிமுக
    X
    அதிமுக

    அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்- சென்னையில் 9 மாவட்டங்களில் நாளை பகுதி பொறுப்பாளர்கள் தேர்வு

    சென்னையில் 9 மாவட்டங்களில் நாளை காலை 10 மணிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னையை பொறுத்தவரை பகுதி பொறுப்புகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் 9 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
    சென்னை:

    அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3-வது கட்ட தேர்தல் ஒன்றிய நகர, பேரூராட்சிகளில் நடந்து வருகின்றன.

    அதில் 25 மாவட்டங்களில் முதல் கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை அறிவித்துள்ளது.

    நாளை (11-ந் தேதி) சென்னையில் உள்ள 9 மாவட்டங்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கும், செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கும், காஞ்சிபுரத்திற்கும் இது தவிர தேனி, கடலூர், ராமநாதபுரம், தென்காசியிலும் தேர்தல் நடக்கிறது.

    சென்னையில் 9 மாவட்டங்களில் நாளை காலை 10 மணிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னையை பொறுத்தவரை பகுதி பொறுப்புகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் 9 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    பகுதி தலைவர், பகுதி செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர் 2-பேர், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள் 3 பேர் என 9 பொறுப்புகளுக்கு போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

    போட்டி இல்லாத பட்சத்தில் ஏகமனதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுக்கும் பட்சத்தில் தேர்தலோ அல்லது அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பால கங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், அசோக் ஆகியோர் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளளனர். திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு தேர்தலை சுமூகமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் தலைமையில் இன்று நொளம்பூரில் உள்ள வேலம்மாள் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நாளை நடக்கும் தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். போட்டியின்றி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் பா.பென்ஜமின் செய்து வருகிறார்.


    இதையும் படியுங்கள்... பஞ்சு-நூல் விலை உயர்வால் ரூ.4500 கோடி ஆடை வர்த்தகம் இழப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் தகவல்
    Next Story
    ×