என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ்-லாரிகளில் ஏர்ஹாரன் பயன்படுத்தக் கூடாது
Byமாலை மலர்27 May 2022 3:15 PM IST (Updated: 27 May 2022 3:15 PM IST)
பஸ்-லாரிகளில் ஏர்ஹாரன் பயன்படுத்தக் கூடாது என போலீசார் அதிரடி உத்தரவு.
ராஜபாளையம்
ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது குறித்து அரசுபணிமனை மேலாளர்கள், தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், ராஜபாளையம் பொறுப்பு டி.எஸ்.பி சபரிநாதன் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த கூட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் (நெடுஞ்சாலை), நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா ஆகியோர் தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
ராஜபாளையம்- தென்காசி ரோடான மெயின்ரோடு,மதுரை ரோடுகளில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தி ற்காகவும்,பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் குழா ய்கள் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் இரவில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன.இருப்பினும் சாலைகள் சீரமைக்கப்படும் வரை வாகனங்கள் ஒருவரை ஒருவர் முந்தாமல் சீரான வேகத்தில் கவனமாக இயக்கி ஒத்துழைப்பு தரவேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரனை தாங்களே முன்வந்து அகற்றிவிடக்கோரி கல்விநிறுவன பஸ்கள், நூற்பாலை பஸ்கள் மற்றும் லாரிகள்,தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு உத்தரவு கடிதம் அனுப்பட்டு விட்டது. இதையும் மீறி பயன்படுத்தப்படும் ஏர்ஹாரன்கள் போலீஸ் மூலம் அகற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும்தென்காசி ரோட்டில் காந்திகலை மன்றம் அருகே சாந்தி தியேட்டர் அருகே ஸ்டேட் பேங்க் முன்பு பஸ் நிறுத்தம் செயல்பட அனுமதி கிடையாது.அங்கு வாகனங்களை நிறுத்தி ஆட்களை ஏற்றவோ இறக்கவோ கூடாது.
இது ஆட்டோக்களுக்கும் பொருந்தும். தெற்கே இருந்து வடக்கு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் காந்திசிலை ரவுண்டானாவில் இருந்து இடது புறமாக சென்று நீதிமன்றம் வழியாக மாடசாமிகோவில்தெருவை அடைந்து பஞ்சுமார்க்கெட் நேரு சிலை வழியாக மதுரை ரோட்டை சென்றடைய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிரோடு வரையிலான இணைப்பு சாலை,கூடிய விரைவில் வர இருப்பதாலும், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிசாலையும் நடைமுறைக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாலும் போக்குவரத்து இயல்பு வாழ்க்கை திரும்ப வாய்ப்புள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X