search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டி  போட்டியை தொழிலதிபர் முருகேசபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    X
    மாட்டு வண்டி போட்டியை தொழிலதிபர் முருகேசபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி போட்டி

    ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே ஓசநூத்து கருப்பசாமி, சுடலை மாடசாமி, மொட்டையசாமி கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது.  போட்டிக்கு சண்முகையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பெரிய மாட்டு வண்டி போட்டி மற்றும் சிறிய மாட்டு வண்டி போட்டி ஓட்டப்பிடாரம்- பாளையங்கோட்டை சாலையில் நடந்தது.

    பெரிய மாட்டு வண்டி போட்டி 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தது.  போட்டியை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசபாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 13 மாட்டு  வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை மேட்டூர் அழகுபெருமாள் வண்டி தட்டிச் சென்றது. 2-வது பரிசை சக்கம்மாள்புரம் அனுசியா வண்டியும்  தட்டிச்சென்றது.

    சிறிய மாட்டு வண்டி 12 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இந்த போட்டியில் 23 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் கம்பம் குமார் மாட்டு வண்டி முதல் பரிசை தட்டிச் சென்றது.

    2-வது பரிசை மேலமருதூர் முத்துப்பாண்டி  வண்டியும், 3-வது பரிசை கம்பம் பெரியகருப்பன்  வண்டியும் தட்டிச்சென்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பெரிய மாட்டு போட்டியில் முதல் பரிசு ரூ.30 ஆயிரத்தை ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் வழங்கினார். 2-வது பரிசு ரூ.25 ஆயிரத்தை குலசேகரநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் முருகன் வழங்கினார்.

     3-வது பரிசு ரூ.20 ஆயிரம் கிழக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் ஜோசப் மற்றும் தொழிலதிபர் கோமதி வழங்கினர்.  சிறிய மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா வழங்கினார். 2-வது பரிசு ரூ.18 ஆயிரம் மலைப்பட்டி பஞ்சாயத்து தலைவர் இக்பால் வழங்கினார்.

    3-வது பரிசு ரூ.16 ஆயிரத்தை முறம்பன் பஞ்சாயத்து தலைவர் சுடலைமணி, யூனியன் கவுன்சிலர் மாடசாமி ஆகியோர் வழங்கினர். போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு பார்வையிட்டனர்.

    Next Story
    ×