search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
    X
    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

    கருணாநிதி பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

    கருணாநிதி பிறந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் பொறுப்பை அரை நூற்றாண்டு காலம் சிறப்புடன் நிறைவேற்றியவர். 5 முறை 19 ஆண்டுகள் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்து நவீன தமிழகத்தை உருவாக்க அடித்தளம் அமைத்து வளர்த்ெதடுத்த தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்.

    கலைஞரின் செயல்பாட்டு சிறப்பை பின்பற்றி தமிழகத்தில் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட பெரும் உழைப்பை செலுத்தி திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதல்-அமைச்சர் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருகிற 3-ந் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

    அதேபோன்று அனைத்து ஒன்றிய நகர, பகுதி, பேரூர் மற்றும் கிளை கழக அலுவலகங்களிலும், சார்பு அணிகளின் அலுவலகங்களிலும், மாநகராட்சி வட்டங்கள், நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் மற்றும் ஒன்றியங்களில் ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிளைகளிலும் கலைஞரின் திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தி ஒலிப்பெருக்கி அமைத்து கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.

    மேலும் திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், மாணவர் விடுதி, ஆதரவற்றோர் இல்லம், மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகம் ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து, நலத்திட்டங்களை வழங்கி கொண்டாட வேண்டும். 

    மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், வார்டு சிளை கழக நிர்வாகிகள், கழக முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×