search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் 2133 மது பாட்டில்கள்- சாராயம் பறிமுதல்: 203 பேர் கைது
    X

    கடலூர் மாவட்டத்தில் 2133 மது பாட்டில்கள்- சாராயம் பறிமுதல்: 203 பேர் கைது

    • போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் 7 தனிப்படை அமைத்து போலீசார் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்வது போன்றவற்றை தடுக்கும் விதமாக அதிரடியாக அனைத்து பகுதிகளிலும் சோதனைகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதியிலிருந்து நேற்று (17-ந்தேதி) வரை 199 சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து 203 நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை 920 லிட்டர் சாராயம் மற்றும் 2,133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×