search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவலர் குடியிருப்பு அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
    X

    கொள்ளை நடைபெற்ற வீட்டில் போலீசார் விசாரணை மேற் கொண்ட காட்சி.

    காவலர் குடியிருப்பு அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

    • இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார்.
    • திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் (வயது 47). இவர் நடுவனந்தல் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி சுகித்ரா அன்னம்புத்தூர் கிராமத்தில் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார். இவர்களது குழந்தைகளும் பள்ளிக்குச் சென்று விட்டு டியூசனுக்கு சென்று விட்டனர். தலைமை ஆசிரியர் கோபாலக்கண்ணன் காலை பள்ளிக்குச் சென்று விட்டு மீண்டும் இரவு 7.30 மணியளவில் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீடு உடைக்க பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே அறைக்கு சென்று பார்த்தபோது அவரது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரிய வந்தது

    .இது குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திண்டிவனம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கைரேகை மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.மேலும் இந்த கொள்ளை குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதி திண்டிவனம் டி.எஸ்.பி.அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ளது. மேலும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகும். போலீசாரும் பொதுமக்களும் அதிகம் அளவில் நடமாடும் பகுதியில் கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×