search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் பரிசல் துறையில் சுங்க கட்டண வசூல் ரூ.2.61 கோடிக்கு ஏலம்
    X

    ஒகேனக்கல் பரிசல் துறையில் சுங்க கட்டண வசூல் ரூ.2.61 கோடிக்கு ஏலம்

    • ஏலத்தில் அரசுக்கு 40 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
    • சம்பந்தமில்லாத ஆட்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் இந்த ஆண்டிற்கான ஒகேனக்கல் பரிசல் இயக்க ஒப்பந்தம் மற்றும் சுங்க கட்டண வசூல் ஆகியவை 2.61 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கம், சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்த காலம் முடிவுறும் நிலையில், 2023 - 24 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த ஏலம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற போதிலும், பல்வேறு காரணங்களுக்காக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் சுங்க கட்டண வசூல் ஒப்பந்தங்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் பரிசல் இயக்க ஒப்பந்தத்திற்கு 23 ஒப்பந்ததாரர்களும், சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் 30 ஒப்பந்ததாரர்களும் கலந்து கொண்டனர். இதில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா தலைமையில் நடைபெற்றது ஏலத்தில் இந்தாண்டிற்கான பரிசல் துறை ஏலம் 1.40 கோடிக்கும், சுங்கக் கட்டண வசூல் ஏலம் 1.21 கோடிக்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த ஆண்டு பரிசல் துறை ரூ.1.05 கோடிக்கும், சுங்க கட்டணம் ஏலம் ரூ.1.16 கோடிக்கு என மொத்தம் ரூ.2.21 கோடிக்கு ஏலம் விடப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்ற இரு ஒப்பந்தமும் ரூ. 2.61 கோடிக்கு ஏலம் விடப்பட்டதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டில் வெளிப்படை தன்மையாக நடைபெற்ற ஏலத்தில் அரசுக்கு 40 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்தாண்டிற்கான பரிசல் இயக்கம், சுங்க கட்டண வசூல் ஏலம் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற கொண்டிருந்தது. கூட்டத்தில் அனுமதி சீட்டு பெறப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென

    மன்றத்திற்கு சம்பந்தமில்லாத ஆட்கள் கூட்ட அரங்கில் நுழைந்து, தங்களுக்கு முறையாக ஒப்பந்த ஏலத்திற்கான நோட்டீஸ் வழங்கப்படவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டு அனுமதி சீட்டுடன் ஏலத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்த நிலையில், சில நிமிடங்கள் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட போது போலீஸார் அனுமதிச்சீட்டு இல்லாத நபர்களை வெளியேற்றினர். இதனால் ஏலம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம் ஏற்பட்டது.

    Next Story
    ×