search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தென்காசி மாவட்டத்தில் புகையிலை விற்ற 28 கடைகளுக்கு சீல்
    X

    தென்காசி மாவட்டத்தில் புகையிலை விற்ற 28 கடைகளுக்கு 'சீல்'

    • இந்த ஆண்டில் கஞ்சா விற்பனை செய்ததாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கஞ்சா விற்பனை செய்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 64 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 87 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிட மிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 31 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து 75 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் ரூ.1.95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு 28 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×