search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகை
    X

    3 படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகை

    • படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகைமாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
    • நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டு படகு இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 3 படகு உரி மையாளர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொ கைக்கான காசோலைகளை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமை ச்சரால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் விசைப்ப டகுகள் இலங்கை அரசினால் கைப்ப ற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்ப டை த்தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 2 விசைப்படகு உரிமை யாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மரிய சாமுவேல் ஆகியோரின் 2 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் மற்றும் ஜெயஇருதயம் என்பவரின் 1 நாட்டுப்படகு உரிமையாளருக்கும் என மொத்தம் 3 படகு உரிமையாளர்களுக்கு, ரூ.1,லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதலைமச்சரின் பொது நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை இயக்குநர் (மீன்வளத்துறை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×