search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கைதான 3 பேரையும் படத்தில் காணலாம்.

    தென்காசியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

    • ஆட்டோவை சோதனை செய்த போது அதில் குட்கா புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது.
    • புகையிலை பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாக கைதானவர்கள் கூறினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி டி.எஸ்.பி. நாகசங்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளபாண்டி, முதல்நிலை போலீசார் சரவணகுமார், சிவப்பிரகாஷ், சேர்மக்கண்ணன், அன்பரசன் ஆகியோர் குத்துக்கல்வலசை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோவை சோதனை செய்த போது வெள்ளமடை மாணிக்கம் மகன் சுரேஷ், ஆட்டோவை ஒட்டிவந்த கீழப்புலியூரை சேர்ந்த சதீஷ் ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா புகையிலை கடத்தி வந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கரடி குளத்திலிருந்து கொண்டு வந்ததாகவும், மேலும் பொருட்கள் இருப்பதாக கூறியதின் அடிப்படையில் கரடிகுளம் சென்று மேலும் குட்கா புகையிலை கைப்பற்றி, அதை வைத்திருந்த கரடிகுளம் குருசாமி மகன் சுரேஷ் (வயது 31) உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதாகவும், குற்றாலம் காசிமேஜர்புரத்தை சேர்ந்த ஒரு நபர் தலைமையில் நடப்பதாகவும் கூறினார். அந்த நபரை போலீசார் தேடி வருகின்ற னர். மேலும் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கைப்பற்றபட்டது.

    Next Story
    ×