என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
30 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்ல கூடாது: தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற 6,693 வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு- 40 லட்சத்து 60 ஆயிரத்து 25 ஆயிரம் ரூபாய் வசூல்
- 30 கி.மீ. வேகத்துக்கு மேல் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பட்டது.
- 1,411 வாகன உரிமையாளர்கள் 8 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம்,தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. அதனால் விபத்தை தடுக்க வளைவு பகுதிகளில் பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி வேகமாக வாகனங்கள் செல்கிறது.
தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொப்பூர் மலைபாதை இறக்கம் என்பதால் வாகனங்களை டிரைவர்கள் வேகமாக இயக்குகிறார்கள்.
இதனால் அடிக்கடி லாரிகள் விபத்தில் சிக்குகின்றன. அதிலும் பெரும்பாலும் கனரக வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றன.
இதனை தடுக்க 30 கி.மீ. வேகத்துக்கு மேல் சென்ற வாகனங்களுக்கு அபராதம் விதிப்பட்டது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறியதாவது:-
தருமபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பாதை யில் விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி தருமபுரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக, மலைப்பாதை யான வெள்ளக்கல்லில் இருந்து தொப்பூர் வரை 30 கி.மீட்டருக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் வகையில் அப்பகுதியில் ஸ்பீடு ரேடர்கள் கடந்த, 2021 ஜூன் 20-ல் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் 2022 ஜூன் 30 வரை இப்பகுதியில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் அதிவேகமாக சென்ற 6,693 வாகனங்களுக்கு இ-செலான் மூலம் 40 லட்சத்து 60 ஆயிரத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் 1,411 வாகன உரிமையாளர்கள் 8 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளனர்.
அபராத தொகையை செலுத்தா விட்டால் தங்களது பகுதியிலுள்ள ஆர்.டி.ஓ. அலுவலகங்களு க்கு செல்லும் போது கூடுதல் அபராதத்துடன் தொகையை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாகனங்களை இயக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.