search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு
    X

    சேலத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு

    • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு
    • தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    31 பேர் பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் நேற்று 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மொத்தம் 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயத்தில் நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    முக கவசம்

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர். கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×