search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கஞ்சா விற்ற 4 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 4 பேர் கைது

    • தனியார் திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.
    • வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கஞ்சா பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன்ஜோசுபதம் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தருமபுரியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாருக்கு எஸ்.வி. சாலையில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். இதில் அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

    உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் தொழிற்மையம் காமராஜர் நகர் விஜயன் மகன் சுதர்சன் (வயது24) என்பவர் 1 கிலோ 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தருமபுரியில் உள்ள சவுளூர் மேம்பாலம் அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    உடனே அவரை பிடித்து விசாரித்ததில் மணிப்பூர் கிராமம் கோகுலகண்ணன் (22), சோகத்தூர் தினேஷ் (20) ஆகிய 2 பேர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் வாலிபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாைவ மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×