search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது
    X

    காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது

    • காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட் டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா மற்றும் லாட்ரி விற்பனையை, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் பஸ் நிலையம் அருகே, மோட்டார் சைக்களில் வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரியை விற்பனை செய்வதாக, நகர போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. தொடர்ந்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, லாட்டரி விற்பனை செய்த நபர், அங்கிருந்து கிளம்பினார். போலீசார், அவரை விரட்டி பிடித்து, மோட்டார் சைக்கிளை சோதனைச் செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்ரி, டைரி, நோட்டு, 3 செல்போன், பணம் ரூ.2,700 இருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 29) என்பதும், அவரது செல்போனில், வாட்ஸ்அப் குரூப் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர், ஸ்ரீநாத் தலைவனாக சேலத்தை சேர்ந்த மோகன்ராஜ் செயல்படுவது தெரிய வந்தது. மோகன்ராஜின் செல்போனை கண்காணித்த போலீசார் அவரிடம் காரைக்காலை சேர்ந்த ஹாஜா மைதீன் (48), குல் முகமது (40), ஹாஜா (46), ஆகியோர் காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து ஸ்ரீநாத், ஹாஜா மைதீன் (48),குல் முகமது (40), ஹாஜா (46), ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 செல்போன், லாட்ரி, செல்போன், ரொக்கம் ரூ.2,700 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை மூளையாக செயல்படும் சேலம் மோகன்ராஜ் மற்றும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×