என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி நகரில் 40 டன் தீபாவளி குப்பைகள் அகற்றம்
- தருமபுரி நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு குப்பைகள் மற்றும் பொது மக்களால் கொட்டப்பட்ட 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இவை அனைத்தும் நக ரில் உள்ள 4 நுண் உர மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
- சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தருமபுரி:
தருமபுரி நகரில் தீபாவளி பண்டிகை வழக்க மான உற்சாகத்துடன் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் பொது மக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பட்டாசுகள் வெடித்தும் மத்தாப்புக்கள் கொளுத்தியும் கொண்டாடினர். இந்த பட்டாசு குப்பைகள், வீடுகளில் இருந்து கொட்டப்படும் இனிப்பு பெட்டிகள், ஜவுளி குப்பைகள் என சுமார் 40 டன் தீபாவளி குப்பைகள் தெருக்களில் கொட்டப்பட்டது.
இந்த தீபாவளி குப்பைகள் அனைத்தும் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, ஆணையாளர் புவனேஸ்வரன் ஆகியோர் ஆலோசனைப்படி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன் சுசீந்திரன், ரமணசரண், நாகராஜன் மற்றும் துப்புரப் பணியாளர்கள் இன்று காலை முதல் அகற்றும் பணியில் தீவிரமாக ஏற்பட்ட னர். இந்த குப்பைகள் அனைத்தும் தருமபுரி நகரில் உள்ள பச்சியம்மன் கோவில் மயானம், குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் கோவில் மயானம், சந்தைப் பேட்டை, மதிகோன்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரமையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்