என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடப்பட்ட 400 மரக்கன்றுகள்
- மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
- தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர்.
காஞ்சிபுரம்:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பாக்கம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.சேகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஞ்சனா, முத்து சுந்தரம், ஆகியோர் கிராம மக்களோடு கலந்து கொண்டு ஆடிப்பட்டம் தேடி விதைக்க வேண்டும் எனும் பழமொழிக்கு ஏற்ப தேவரியம்பாக்கம் கிராமப் புறத்தில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலத்தில் கிராம மக்களின் உதவியோடு 400 பயன் தரும் மரக்கன்று களை நட்டு வைத்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.