என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த பரமக்குடியை சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
- அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
- ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தென்னவனூரை சேர்ந்தவர் கருப்பணன் மகன் ராமு (வயது 60). இவர் தற்போது அடுத்த பட்டணம்காத்தான் செக்போஸ்ட் அருகில் குடியிருந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி குருவம்மாள் என்ற மனைவியும், சரவணக்குமார் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சத்யாவுக்கு திருமணமாகி கணவருடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார்.
ராமு முதலில் உள்ளூரில் வேலை பார்த்தார். ஆனால் குழந்தைகளை படிக்க வைக்கவும், மகளை திருமணம் செய்து கொடுக்கவும், குடும்பம் நடத்தவும் பணம் பற்றாக்குறையாக இருந்ததால் ராமு வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.
அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்தான் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 12-ந்தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மூச்சுத்திணறலில் ராமு உள்பட 7 தமிழர்கள் என மொத்தம் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
இவர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை கேரளா முதல்வர் பினராயி விஜயன் முறைப்படி பெற்றுக்கொண்டார்.
அங்கு தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தானும் மரியாதை செலுத்தி தீ விபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி ராமு உடல் அவரது சொந்த ஊரான பரமக்குடி தென்னவனூக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு வரப்பட்டது.
அங்கு கூடியிருந்த மனைவி மற்றும் உறவினர்கள் ராமு உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ராமு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் அறிவித்த ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ராமுவின் குடும்பத்தாரிடம் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்