என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தலைமை ஆசிரியரிடம் நூதனமாக ரூ 5.79 லட்சம் திருட்டு- வாலிபருக்கு வலைவீச்சு
- சீதாராமன் ஓய்வூதிய தொகையை பெறுவதற்காக திருமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.
- பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் தனது வீட்டில் குடியிருக்கும் சந்தோசிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து எடுத்து வரச்சொல்வது வழக்கம்.
திருமங்கலம்:
மதுரை திருநகர் சுந்தர்நகரை சேர்ந்தவர் சீதாராமன்(வயது89). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். சீதாராமனின் வீட்டில் மாடியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து வருகிறார்.
சீதாராமன் ஓய்வூதிய தொகையை பெறுவதற்காக திருமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தார். முதுமை காரணமாக சீதாராமன் வெளியில் அவ்வளவாக செல்வதில்லை. வங்கிக்கும் செல்ல முடியவில்லை.
இதனால் பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் தனது வீட்டில் குடியிருக்கும் சந்தோசிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து எடுத்து வரச்சொல்வது வழக்கம். இதன் காரணமாக சந்தோசிற்கு சீதாராமனின் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டு விவரங்கள் தெரிந்துள்ளது.
சீதாராமன் முதுமை காரணமாக வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாலும், கணக்கில் உள்ள பணம் சம்பந்தமான விபரங்கள் தெரியாது என்பதாலும் அதனை பயன்படுத்தி அவர் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ள சந்தோஷ் திட்டமிட்டார்.
அதன்படி கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் சீதாராமனின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ஆன்லைன் மூலமாக ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்தை எடுத்துள்ளார். கடந்த வாரம் திடீரென பணத்தேவை காரணமாக சீதாராமன் நேரடியாக திருமங்கலம் வங்கிக்கு வந்து ரூ.5 லட்சத்திற்கு காசோலை அளித்துள்ளார்.
அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி காசோலையை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது அவரது கணக்கிலிருந்து பல தவணைகளில் லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருந்ததது தெரிய வந்தது.
உடனடியாக அவர் இதுகுறித்து சந்தோசிடம் விவரம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதுகுறித்து தனக்கு தெரியாது என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் சீதாராமனுக்கு மேலும் சந்தேகம் அதிகமானது.
இந்நிலையில் சந்தோஷ் மற்றும் அவரது மனைவி திடீரென தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5.79 லட்சம் திருடப்பட்டது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் நேரில் சென்று புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சந்தோசை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்