என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே தனித்தனி விபத்தில் 9 பேர் காயம்
- 5 பேரும் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- ஆட்டோ டிரைவரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
விழுப்புரம்:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். கார் டிரைவரான இவரும் இவரது உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த ஆண்டாள் (75), அவரது மகள்களான திலகவதி, பத்மாவதி, பேத்தி காந்தமி ஆகியோருடன் காரில் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பதற்காக அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து மீண்டும் சேத்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது திண்டிவனத்தை அடுத்த மொளசூர் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் காரானது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற 5 பேரும் பலத்த காயமடைந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஆண்டாள் ஆபத்தான நிலையில்மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணா மலை மாவட்டம் அண்ட ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். ஆட்டோ டிரைவரான இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நி லையில் இவர் குடும்பத்துடன் திருவண்ணா மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் சென்னைக்கு தனது மனைவி சாந்தி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆட்டோ வில்சென்று கொண்டி ருந்தார். ஆட்டோ திண்டிவனத்தை அடுத்த சாரம் அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது, முன்னாள் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேரும் காயமடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் நாகேந்திரன் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே இருவேறு விபத்தில் 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்