search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் தசை சிதைவு நோயால் அவதிபடும் 9 வயது சிறுமி
    X

    மனு கொடுக்க வந்த சிறுமி மற்றும் பெற்றோரை படத்தில் காணலாம்.

    காரைக்காலில் தசை சிதைவு நோயால் அவதிபடும் 9 வயது சிறுமி

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்து போனது.
    • சிறுமியின் பெற்றோர் பல்வேறு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியை சேர்த்து சிகிச்சை அளித்தும், இதுவரை சரி செய்ய முடியவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு. பட்டினம் மீனவ கிராமத்தில் வசிப்பவர் சதீஷ். இவர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் பெண் குழந்தை நதினா (வயது 9). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு வரை எல்லோரையும் போல் சென்று வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 2 கால்களும் செயலிழந்து போனதால் நடக்க முடியாமலும், பள்ளிக்குச் செல்ல முடியாமலும் அவதியுற்று வருகிறார்.

    சிறுமியின் பெற்றோர் பல்வேறு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியை சேர்த்து சிகிச்சை அளித்தும், இதுவரை சரி செய்ய முடியவில்லை என கூறப்படுகிறது. தொடர் சிகிச்சையளிக்க பொருளாதாரம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தசை சிதைவு நோயால் அவதியுறும் 9 வயது சிறுமியின் மேல் சிகிச்சைக்கு, பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு பெற்றோர், மாவட்ட கலெக்டர் முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு வழங்கி கண்ணீர் மல்க வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×