search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில்  கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்  2,033 இடங்களில் நடந்தது
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 2,033 இடங்களில் நடந்தது

    • விழுப்புரம் மாவட்டத்தில் 2,033 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:- இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 மாத இடை வெளிக்குப்பின் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதி கரித்து வருகிறது. ஜனவரி 2021 முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட–த்தில் கொரோனா தடுப்பூசி 16.1.2021 முதல் ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும், 26.2.2021 முதல் முன்கள–ப்பணி யாளர்களுக்கும், 1.3.2021 முதல் 45 வயதிற்கு மேற்பட்ட பொது மக்களுக்கும், 20.5.2021 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கும், 3.1.2022 முதல் 15 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட வர்களுக்கும், 16.3.2022 முதல் 12 வயதிலிருந்து 14 வயதிற் குட்பட்டவர்கள் என படிப்படியாக அனை வருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 1811530 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 1807593 நபர்களுக்கும் மற்றும் ஊக்குவிப்பு தவணையாக 15759 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 2-ம் தவணை செலுத்திய பிறகு 9 மாதங்கள் கடந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணைநோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தவணை செலுத்தி கொரோனா நோய்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் அவர் களின் வழிகாட்டுதலின் படி, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி வருகிற 12.6.2022 அன்று நமத மாவட்டத்தில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் 2033 இடங்களில் நடத்தப்பட வுள்ளது. முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் ஊக்குவிப்பு தவணை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கொரோனா உயிரிழப்ப–பைத் தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசி ஆகும். 12.6.2022 அன்று நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்களில் கொரானா வழிகாட்டு நெறி முறைகளைப் பின்பற்றி கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்ர் மோகன் தெரிவித்துக் கொண்டார்.

    Next Story
    ×