search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
    X

    மேட்டுப்பாளையம் அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை

    • மேய்ச்சலுக்கு வந்த மாட்டை சிறுத்தை கொன்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
    • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முத்துக்கல்லூர் பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருபவர் கோவிந்தராஜ்.

    இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று மாலை முத்துக்கல்லூர் கிராமத்தில் தோகைமலை அடிவார பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை ஒன்றை வனப்பகுதியினுள் இருந்து வெளியே வந்து பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று பசு மாட்டை தாக்கி இழுத்து சென்றுள்ளது.

    பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கோவிந்தராஜ் சென்று பார்த்தபோது அங்கு புதரில் மறைந்து இருந்த சிறுத்தை, பசுமாட்டை கடித்து இழுத்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவிந்தராஜ் இதுகுறித்து காரமடை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காரமடை வனத்து றையினர், அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள ஒரு புதர் பகுதியில் வைத்து பசு மாட்டினை சிறுத்தை கடித்து கொன்று ரத்தத்தை குடித்து விட்டு சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து உயிரிழந்த பசுவை ஆய்வு செய்த போது சிறுத்தை தாக்கியதை உறுதி செய்தனர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×