search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் வர்ணதீர்த்தம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம்
    X

    அரூர் வர்ணதீர்த்தம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம்

    • வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • கட்டுமானப்பணிகளை துவங்க அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரி மாவட்டம், அரூர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் 2022-23ஆம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியினை தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பணிக்கு 28.03.2023 ஆம் தேதியன்று ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, 12.04.2023 ஆம் தேதியன்று பணி ஆணை வழங்கப்பட்டது.

    பழைய பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகள் ஆகியவற்றை உடன் இடித்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணிகளை துவங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், அரூர் வர்ணதீர்த்தம் பகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின்கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு கட்டுமானப்பணிகளை துவங்க அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது அரூர் வட்டாட்சியர் திரு.பெருமாள், அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×