search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாள்புரம் காமராஜர் சாலையில்  பூட்டி கிடக்கும் பூங்காவை திறக்க வேண்டும்- மேயரிடம் வியாபாரிகள் மனு
    X

    பெருமாள்புரம் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினர் மேயர் சரவணனிடம் மனு கொடுத்த காட்சி.

    பெருமாள்புரம் காமராஜர் சாலையில் பூட்டி கிடக்கும் பூங்காவை திறக்க வேண்டும்- மேயரிடம் வியாபாரிகள் மனு

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • காமராஜர் சாலையில் உள்ள பூங்காவினை வியாபாரிகள் சங்கம் சார்பில் பராமரித்து வருகிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    வியாபாரிகள் மனு

    கூட்டத்திற்கு செயற்பொறியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பெருமாள் புரம் வட்டார ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் டேனியல் ஆப்ரகாம், செயலாளர் ஆனந்தராஜ், மாநகர வர்த்தக கூட்டமைப்பு தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் வியாபாரிகள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பெருமாள்புரம் காமராஜர் சாலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு உள்ள பூங்கா மற்றும் கழிவறை களை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம். தற்போது இந்த பூங்கா மற்றும் கழிவறையை பூட்டி விட்டனர். எனவே அதனை திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    குண்டும், குழியுமான சாலை

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 20-வது வார்டு தலைவர் ஜெய்லானி அளித்த மனுவில், பேட்டை 20-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. 15 ஆண்டுகளாக இந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நெல்லை கால்வாய் நயினார் குளம் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நெல்லையப்பன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், நயினார் குளம் பாசனத்தை நம்பி 586 ஏக்கர் நஞ்சை நிலங்கள் உள்ளது. இதற்கு இடையூறாக ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றை தடுக்க வேண்டும். சில இடங்களில் தார்ச்சாலை புதிதாக போடப்பட்டு 3 மாதத்தில் சேதம் அடைந்து விட்டது. எனவே அவற்றை தரமாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    குடிநீர் தட்டுப்பாடு

    டவுன் ஆனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் மன்றத்தினர் அளித்த மனுவில், 14-வது வார்டுக்கு உட்பட்ட எங்கள் பகுதியில் 360 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அம்மன் கோவிலுக்கு மேற்கே 3 தெருக்கள் உள்ளது.

    இந்த 3 தெருக்களுக்கும் சேர்த்து தனியாக ஒரு குடிநீர் குழாய் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தெருக்களில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×