என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகளை அலற விடும் மர்ம விலங்கு
- கொட்டகையில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்துள்ளார்.
- 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன.
பாலக்கோடு,
பாலக்கோடு அடுத்த கரகத அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பன்.
இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்துள்ளார்.
அப்போது 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முனியப்பன் இதுகுறித்து உடனடியாக பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டு விலங்குகளின் கால் தடம் குறித்தும் அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் தெரிகிறதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜ், கரகத அள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட வேண்டாம் எனவும், விலங்குகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டு கொண்டுள்ளார்.