search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X

    இளம்பெண் மாயம்

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • கணவனிடம் அப்பா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற சுஜி காணவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மகேந்திர மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மனைவி சுஜி (வயது 19). இருவரும் கடந்த கடந்த 1 வருடத்திற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் 1 வயதில் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று சுஜி தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்ததால் இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனையடுத்து கணவனிடம் அப்பா வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற சுஜி காணவில்லை. பெற்றோர் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சந்தோஷ் மகேந்திர மங்கலம் போலிஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுஜியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×