என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்து கதறி அழுத இளம்பெண்: கணவனிடம் இருந்து மகனை மீட்டுத் தர கோரிக்கை
- கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக லலிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
- 3 பேரும் என்னை போனில் தினமும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகனந்தல் அக்கராய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா (வயது 22), இவருக்கும் திருக்கோவிலூர் அருகே பாடியந்தல் கிராமத்தைச் சார்ந்த ஏழுமலை மகன் முருகன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அஸ்வின் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக லலிதா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் லலிதா அவரது தாய் சரஸ்வதியுடன் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் நேற்று வந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கு எதிரே நின்று கொண்டு தனது மகனை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறி கதறி அழுதார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணை கேனை பறிமுதல் செய்து அவரை சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து லலிதா மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் எனக்கும் முருகன் என்பவருக்கும் கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்கு அஸ்வின் என்ற வயது 3 ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஏப்ரல் 20-ந்தேதி மாலை நான் எனது தாய் வீட்டில், நான் இருக்கும் போது எனது கணவர் முருகன் வீட்டில் அத்துமீறி நுழைந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து என்னிடம் இருந்த எனது குழந்தையை பறித்துக்கொண்டு சென்று விட்டார்.
இது சம்மந்தமாக நான் எனது கணவரின் வீட்டிற்கு சென்று குழந்தையை தருமாறு கேட்டேன். அதற்கு எனது கணவர் முருகன் அவரது தாய் செல்வி, சித்தி விசாலாட்சி ஆகியோர் ஒன்று கூடி, என்னை திட்டி அடித்து குழந்தையை திரும்ப கொடுக்கமுடியாது என்று சொல்லி அங்கிருந்து துரத்திவிட்டனர். இது சம்மந்தமாக நான் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த 3 பேரும் என்னை போனில் தினமும் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுகிறார்கள். எனவே, தாங்கள் இதில் தலையிட்டு எனது குழந்தையை என்னிடம் மீட்டு கொடுக்க வேண்டும். எனது கணவர், அவரது உறவினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற போது பெண் ஒருவர் தனது மகனை மீட்டுத் தர வேண்டும் என கூட்டரங்கு எதிரே கதறிய சம்பவம் அங்கே இருந்த பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்