என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் இணைப்பு அவசியம்
- உதவித்தொகைகளை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
- பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
தேனி:
தமிழகத்தில் "பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி" திட்டமானது பிப்ரவரி-2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில், 13-வது தவணையாக, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயனாளிகள் பொது சேவை மையம், செல்போன் மூலம் தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். பொது சேவை மையத்திற்கு சென்று, பெயர் பி.எம்.கிசான் இணைய தளத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்து உறுதி செய்யலாம். அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும் உங்களது செல்போனிலும் இணையதள வசதியை பயன்படுத்தி, ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
எனவே பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இது நாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.