search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் சமயபுரத்து மகா மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவம்
    X

    கும்பகோணம் சமயபுரத்து மகா மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவம்

    • இந்த ஆண்டு 34-ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • விழா நாட்களில் சமயபுரத்து மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ஆண்டியப்பர் தெரு, பாரதியார் தெரு பகுதியில் சமயபுரத்து மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 34-ம் ஆண்டு ஆடி உற்சவ திருவிழா கடந்த 17-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி சமயபுரத்து மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.

    மேலும் விழா நாட்களில் சமயபுரத்து மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    முக்கிய நிகழ்ச்சியான நேற்று அரசலாற்றங்கரையில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, அலகுகாவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து சமயபுரத்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    இரவு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கா ரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.

    இரவு சக்தி கரகம், பதினெட்டாம்படி வேல், மதுரைவீரன் வேல், காத்தவராயன் வேல், முனீஸ்வரன் வேல், அக்னி கொப்பரையுடன் வீதியுலா நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×