search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் தொடர்ந்து விபத்து - போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகள் கோசாலையில் சேர்க்கப்படும் -அதிகாரி எச்சரிக்கை
    X

    உடன்குடியில் மாடுகளை பிடித்து செல்லும் காட்சி.

    உடன்குடி பகுதியில் தொடர்ந்து விபத்து - போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகள் கோசாலையில் சேர்க்கப்படும் -அதிகாரி எச்சரிக்கை

    • கால்நடைகளை வளர்ப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் ரோடுகளிலும் தெருக்களிலும் விடக்கூடாது.
    • விபத்துக்கள் ஏற்பட்டால் விபத்துகளுக்கு நிதியும் கால்நடை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும்.

    உடன்குடி:

    உடன்குடி பஜார் பகுதியில் மாடு முட்டி பந்தல் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.இதேபோல ரோடுகளில் அலையும் மாடுகளால் வாகன விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பொதுமக்கள் உடன்குடி பேரூராட்சியை முற் றுகையிட்டுபல்வேறு கோரிக்கைகளை வைத்தனர், இது சம்மந்தமாக பேரூராட்சி செயல் அலுவலர் பாபு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆடு, மாடு, நாய், போன்ற கால்நடைகளை வீடு மற்றும் தோட்டங்களில் வளர்ப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் ரோடுகளிலும் தெருக்களிலும் விடக்கூடாது.

    வளர்க்கும் இடத்தில் கால்நடைகளை கட்டி வைத்து, அல்லது அடைத்து வைத்து வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களிலும் வீடுகளிலும் அலைய விடக்கூடாது.

    இதையும் மீறி உடன்குடி பேரூராட்சி பகுதியில் நடமாடினால் அவைகளை பிடித்துச் சென்று, குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் சேர்க்கப்படும். இதற்கான செலவுகள் அனைத்தும் கால்நடை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

    விபத்துக்கள் ஏற்பட்டால் விபத்துகளுக்கு நிதியும் வசூலிக்கப்படும். அதனால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் கட்டிவைத்து அல்லது அடைத்து வைத்து வளர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்தும் இடையூறாக செல்லும் கால்நடைகளை பிடிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×