என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளி மாணவர்கள் சாதனை
- 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.
- 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாளந்தா இண்டர்நேஷனல் பொதுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.
மேலும், இப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற தினேஷ்ராஜ் என்ற மாணவர் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதே போல் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற 10 மாணவர்கள் 500 க்கு 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பில் பயின்ற மாணவர் ருத்ராட்சம் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். மேலும் 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி, இயக்குனர்கள் கவுதமன், டாக்டர்.புவியரசன் மற்றும் முதல்வர்கள் நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினர்.