என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுண்ணாம்புபள்ளம் ஓடை குறுக்கே தடுப்பணை அமைக்க எம்.எல்.ஏ. ஆய்வு
- தடுப்பணை அமைக்க கோரும் பகுதியை எம்.எல்.ஏ .நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- தடுப்பணை அமைத்தால், பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், இண்டூர் ஊராட்சி, சுண்ணாம்புபள்ளம் ஓடை குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுமக்கள் தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஷ்வரனிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தடுப்பணை அமைக்க கோரும் பகுதியை எம்.எல்.ஏ .நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை அடுத்து கண்காணிப்பு பொறியாளருடன் தருமபுரி எம்.எல்.ஏ, எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதியில் தடுப்பணை அமைத்தால், பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் இந்த திட்டம் அமையும் என்பதை வலியுறுத்தினார்.
ஆய்வின் போது, மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய கவுன்சிலர் காளியப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் – கமலேசன், பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் மாது மற்றும் பெரியண்ணன், கிருஷ்ணன், செல்வராஜ், காந்திராஜ் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.