என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு 5வது நாளாக கூடுதல் தண்ணீர் திறப்பு
- ரூல்கர்வ் நடைமுறைப்படி கடந்த 6ந் தேதி முதல் கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் மதகுகள் 10 செ.மீ. அளவுக்கு திறக்கப்ப ட்டு அந்த நீர் இடுக்கி அணைக்கு செல்கிறது.
- இன்று காலை அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. வரத்து 10431 கன அடி. இதில் தமிழக பகுதிக்கு 2147 கன அடியும், கேரள பகுதிக்கு 8307 கன அடியும் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ரூல்கர்வ் நடைமுறைப்படி கடந்த 6ந் தேதி முதல் கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. அணையில் மதகுகள் 10 செ.மீ. அளவுக்கு திறக்கப்ப ட்டு அந்த நீர் இடுக்கி அணைக்கு செல்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 139 அடியை எட்டியது. இதனால் மாலை 5 மணி அளவில் அைணயையொட்டி உள்ள 10 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 7246 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று முன்தினம் 3266 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உள்ளது. வரத்து 10431 கன அடி. இதில் தமிழக பகுதிக்கு 2147 கன அடியும், கேரள பகுதிக்கு 8307 கன அடியும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 7012 மி. கன அடியாக உள்ளது.
லோயர்கேம்ப் அருகே வைரவனாறு, வெட்டுக்காடு, கம்பாமடை, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 4 இடங்களில் கடந்த 2006ம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை நீர் தாழ்வாக செல்லும் இடங்களில் சிறுபுனல் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தற்போது அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் இந்த 4 இடங்களிலும் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
நீர் வரத்து உள்ள சமயங்களில் மின் நிலையங்கள் முழுமையாக செயல்படும். ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திலும் 2 டிரான்ஸ்பார்மர்கள் வீதம் வினாடிக்கு 1.25 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும். அதன்படி 4 ஜெனரேட்டர்கள் மூலம் மொத்தம் வினாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.
தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த ஒரு மாதமாக மின் உற்பத்தி நிலையம் முழுமையாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.70 அடியாக உள்ளது. வரத்து 2707 கன அடி. திறப்பு 3909 கன அடி. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கும் தண்ணீர் கூடுதலாக வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5771 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 46 கன அடி. இருப்பு 435 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 131 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
பெரியாறு 69.2, தேக்கடி 27.2, கூடலூர் 5.7, உத்தமபாளையம் 1.3 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்