search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை குறைந்தபோதிலும் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    கோப்பு படம்.

    மழை குறைந்தபோதிலும் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

    • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியைகடந்த தால் கடந்த 10ந் தேதி முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ப்படும் என அறிவிக்க ப்பட்டது. தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றுவிட்டபோதிலும் வைகை அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. வரத்து 1083 கன அடி. திறப்பு 1050 கன அடி. இருப்பு 5960 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படு வதால் வைகை ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.70 அடியாக உள்ளது. வரத்து 1053 கன அடி.திறப்பு 105 கன அடி. இருப்பு 4861 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.40 அடி. வரத்து 193 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 423 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடி. வரத்து 156 கன அடி. திறப்பு 156 கன அடி. நீர் இருப்பு 100 மி.கன அடி.

    கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இன்று 11-வது நாளாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×