search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் நகரசபையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்
    X

    மேட்டுப்பாளையம் நகரசபையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்

    • மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.
    • பள்ளி இடத்தில் புதிய அறிவு சார் மையம் கட்டுதல் குறித்து விவாதம் நடைபெற்றது

    சிறுமுகை:

    மேட்டுப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. நகர் மன்ற தலைவர் மஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணைத் தலைவர் அருள் வடிவு, நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 25 வது தீர்மானமாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022- 2023 ன் கீழ் ஒரு கோடியே 87 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வார்டு எண் 29 மணிநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் எதிர்புறம் உபயோகமற்ற நிலையில் இருந்த பள்ளி இடத்தில் புதிய அறிவு சார் மையம் கட்டுதல் குறித்து விவாதம் நடைபெற்றது.

    இதற்கு அதிமுக வார்டு கவுன்சிலர் 9 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு செயல்படும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் இடப்பற்றாக் குறை ஏற்படும், எனவே பள்ளி வளாகத்தில் அறிவு சார் மையம் அமைக்கக் கூடாது என கூறினர்.

    ஆனால் இதற்கு நகராட்சி ஆணையர் வினோத், இந்த திட்டம் அரசு கொண்டு வந்த திட்டம். திட்டத்தை நிறுத்த முடியாது என்று விளக்கமளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 9 பேர் கூட்டம் முடிந்த பின்னரும் வெளியே செல்லாமல் நகர மன்ற கூட்ட அரங்கில் உட்கார்ந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் பூமா, நகராட்சி கமிஷனர் வினோத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதன்படி அறிவு சார் மையம் அமைக்க ஏற்ற வேறு இடம் தேர்வு செய்யப்படும் எனவும், அதுவரை தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 9 கவுன்சிலர்களும் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

    Next Story
    ×