search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்- காமராஜ் எம்.எல்.ஏ.
    X

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்- காமராஜ் எம்.எல்.ஏ.

    • கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை.
    • சம்பா சாகுபடி நடக்குமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    மதுரையில் அடுத்த மாதம் 20-ம் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இது தொடர்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    பால்வளத் தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை .திருஞானம், எம். ஜி .ஆர். மன்ற இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது :-

    ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் அ.தி.மு.க. தான் பெரிய கட்சி. தங்களது சுயநலத்துக்காக தி.மு.க.வுடன் சமரசம் செய்து கொள்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கடைமடை பகுதிக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. பல இடங்களில் குறுவை பயிர்கள் கருகி விட்டன. இதனால் சம்பா சாகுபடி நடக்குமா ? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    எனவே இந்த மாதம் வரை தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து கேட்டு பெற வேண்டும். மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

    யார் யாருடன் சேர்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, திராவிட வங்கி தலைவர் பஞ்சாபிகேஷன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, மாணவரணி செயலாளர் ஜவகர், ஒன்றிய செயலாளர்கள் சாமிவேல், நாகத்தி கலியமூர்த்தி, அம்மா பேரவை துணைத்தலைவர் பாலை ரவி, 51-வது வட்டச் செயலாளர் மனோகரன்.

    அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், கரந்தை மகளிர் அணி செயலாளர் சசிகலா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நீலகண்டன், பிரதிநிதி ஏ.டி. சண்முகசுந்தரம், ஐயப்பன், கவுன்சிலர்கள் தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேசவன், கோபால், மாணவரணி முருகேசன், மாவட்ட எம்ஜிஆர் மற்றும் இணைச் செயலாளர் சிங். ஜெகதீசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் தம்பி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×