search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24 ஆண்டுகளுக்குப் பின் ஜருகு ஏரிகள் நிரம்பியது:  பொதுமக்கள் கிடா வெட்டி பூஜை செய்து வழிபாடு  -மானியதஹள்ளி ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர் தூவி மரியாதை
    X

     மானியதஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி தலைமையில் ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஒன்று கூடி வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் வகையில் பூஜை செய்து வழிபட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    24 ஆண்டுகளுக்குப் பின் ஜருகு ஏரிகள் நிரம்பியது: பொதுமக்கள் கிடா வெட்டி பூஜை செய்து வழிபாடு -மானியதஹள்ளி ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர் தூவி மரியாதை

    • 24 ஆண்டுகளுக்கு பின் ஜருகு பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது.
    • பூஜை செய்து வழிபட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மானியதஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜருகு கிராமத்தில் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் சின்னேரி, புட்டான் ஏரி மற்றும் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி உள்ளது.

    இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் இருந்தது. இதனை நம்பி இருந்த விவசாய நிலங்களும் தரிசாக இருந்தது.

    தற்பொழுது கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கன மழையின் காரணமாக 24 ஆண்டுகளுக்கு பின் ஜருகு பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இதனால் பாசன வசதி பெறுகிறது.

    இதன் காரணமாக பெருமகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் பாஜக மாவட்ட துணை தலைவரும் மானியதஹள்ளி ஊராட்சி மன்ற தலைவருமான சிவசக்தி தலைமையில் ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியில் ஒன்று கூடி வருண பகவானுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் வகையில் பூஜை செய்து வழிபட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

    மேலும் மாரியம்மன் கோவில்கள் முனியப்பன் கோவில், சின்னேரி, புட்டான் ஏரி, பெரிய ஏரி, உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் 9 ஆடுகள் வெட்டி பூஜை செய்து ஊர் மக்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. ஒட்டுமொத்த ஊர் பொதுமக்களும் 24 ஆண்டுகளுக்கு பின் ஏரிகளில் நீர் நிரம்பியதை திருவிழா போலவே கொண்டாடி வருகின்றனர்.

    மேலும் இந்த ஏரிகள் நிரம்பிய பின் உபரி நீரானது நீரோடைகள் வழியாக சின்னம்பள்ளியில் உள்ள நாகாவதி ஆற்றோடு கலந்து மேட்டூர் அணையை சென்றடைகிறது. அவ்வாறு வீணாகும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைத்து நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×