என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
- எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது. இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, காரைக்காலில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த மாரத்தான்போட்டியினை காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பரண்டு சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.