search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னை விமானநிலயத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அகில் மரக்கட்டைகள் பறிமுதல்
    X

    சென்னை விமானநிலயத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அகில் மரக்கட்டைகள் பறிமுதல்

    • அகில் மரக்கட்டைகள் சுமார் 20 கிலோ இருந்தன.
    • சந்தன மரத்தை விட அதிக நறுமனம் கொடுக்கக்கூடிய அபூர்வ வகை மரம்.

    ஆலந்தூர்:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர்.

    அப்போது இலங்கையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் சுற்றுலா பயணிகளாக சென்னைக்கு வந்திருந்தனர். அவர்கள் வைத்திருந்த பைகள் மற்றும் சூட்கேசை திறந்து பார்த்த போது 20 பார்சல்கள் தனித்தனியாக இருந்தன.

    அதில் சந்தனத்தை விட அதிக நறுமனம் தரக்கூடிய அகில் மரக்கட்டைகள் சுமார் 20 கிலோ இருந்தன. மேலும் விலை உயர்ந்த அகர் அத்தர் ஆயில் பாட்டில்கள், வாசனை திரவியங்கள் 15 -க்கும் மேற்பட்ட பாட்டில்கள் இருந்தது.

    இந்த அகில் மரம், சந்தன மரத்தை விட அதிக நறுமனம் கொடுக்கக்கூடிய அபூர்வ வகை மரம். இதை வீடுகளில் வளர்ப்பது, சர்வதேச வன பாதுகாப்பு சட்டப்படி குற்றம். இந்த மரங்கள் இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளிலும், நாகா மழை காடுகளிலும், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் அதிகமாக அடர்ந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன.

    அதைப்போல் இந்த மரங்களில் இருந்து வடியும் பிசின்களில் அகர் அத்தர் ஆயில் கிடைக்கிறது. இந்த ஆயில் அதிக நறுமணத்துடன் கூடிய உயர் ரக வாசனை திரவியம். இது மிகவும் விலை உயர்ந்தது.

    இததையடுத்து ரூ.40 லட்சும் மதிப்புள்ள அகில் மரக்கட்டைகள், வாசரனை திரயவியங்களை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த இலங்கை பயணிகள் 2 பேரையும் சுங்கஅதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்கள் இந்த நறுமன கட்டைகள், வாசனை திரவியங்களை யாருக்காக கடத்தி வந்தனர்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×