search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோமனஅள்ளி கிராமத்தில்  அக்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அக்குமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    சோமனஅள்ளி கிராமத்தில் அக்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

    • 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு ஊர்வலமாக சென்றனர்.
    • கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் சாட்டை வேப்பிலை எடுத்தும் சென்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅக்குமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

    இக்கோவில் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.

    12 கிராம மக்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு ஊர்வலம், பூங்கரம் எடுத்தலும் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும் அம்மனுக்கு ஆடு, கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சாட்டை அடி வாங்கியும் சாட்டை வேப்பிலை எடுத்தும் சென்றனர்.மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்ன தானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×